செல்லியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


செல்லியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 6 July 2023 12:45 AM IST (Updated: 6 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

செல்லியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் உள்ள செல்லியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக செல்லியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story