உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிறப்பு பூஜை


உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
x

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

சேலம்

ஆட்டையாம்பட்டி:

சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. காலபைரவருக்கு வடமாலை சாத்தப்பட்டது.

மேலும் உற்சவர் காலபைரவர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோவிலை வலம் வந்தது. தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஆட்டையாம்பட்டி, உத்தமசோழபுரம், சேலம், கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, வீரபாண்டி, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


Next Story