முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமரவைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இதேபோல் நொய்யல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வெள்ளியணை அருகே உள்ள காணியாளம்பட்டி காணிகளத்தூர் முருகன் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு புனித நீா், இளநீா், பன்னீா், பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியர் கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்பட கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.