பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர்

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து விளக்கு ஏற்றி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனி பகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலின் வெளியே அமர்ந்திருந்த தாசர்களுக்கு பக்தர்கள் காய்கறி, தானியங்கள் வழங்கி ஆசி பெற்றனர்.

சிறப்பு வழிபாடு

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவிலில் வெங்கடேச பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவாராதன ராஜ உபசார சேவை, விஷேச திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடந்தது. துளசி தீர்த்தம் அருந்தி பலரும் பெருமாளை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெருமாள் கோவிலின் வெளியேயும், உட்பிரகாரத்திலும் பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் கோவிலில் குருவாயூரப்பன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று அதிகாலை 5 மணி முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை வழிப்பட்டனர். இதேபோல் வருகிற 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.


Next Story