ஆடிப்பூர சிறப்பு பூஜை


ஆடிப்பூர சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 July 2023 1:30 AM IST (Updated: 23 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு பூஜை நடந்தது.

நீலகிரி

கூடலூர்

நீலகிரி மாவட்ட கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு பூஜை நடந்தது.

ஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் வரும் நாள், அம்பிகைக்கு உகந்த நாளாக புராணங்கள் கூறுகிறது. இதே நாளில் ஆண்டாள் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்மன் மற்றும் பெருமாள் கோவில்களில் ஆடிப்பூரம் விழா ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் காலை முதலே அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோன்று புத்தூர் வயல் மகாவிஷ்ணு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டத்துளசியம்மன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அன்னதானம்

கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

வளையல் அலங்காரம்

ஊட்டியில் மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.அங்குள்ள காட்டேரி அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன், அர்ச்சகர் சரவணன் ஆகியோர் செய்தி ருந்தனர்.

மேலும் பிங்கர்போஸ்ட் பிரித்தியங்கரா கோவில், முள்ளிக்கொரை சிக்கம்மன், குன்னூர் தண்டு மாரியம்மன் கோவில், மஞ்சூர் முத்து மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பெண் பக்தர்கள் கொடுத்த வளையல்கள் பூஜையில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அம்மனுக்கு கொழுக் கட்டை, கூழ், கஞ்சி படைத்து வழிபாடு செய்ய்பட்டது. மேலும் பெண்கள் அம்மனுக்கு பொருட்களை சீர்வரிசையாக படைத்து வழிபட்டனர்.


Related Tags :
Next Story