புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை


புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
x

வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் ஜல நாராயண பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குரு பழனி சுவாமிகள் தீபாராதனை செய்து, அருளாசி வழங்கி, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினார். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் விதமாக மாங்கல்ய கயிறு மற்றும் கோவிலின் பிரசாதமான நெல்லிக்கனி வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி அறங்காவலர் வாசுதேவ சுவாமிகள் செய்திருந்தார்.


Next Story