15 அடி உயர சர்வசக்தி கணபதிக்கு சிறப்பு பூஜை


15 அடி உயர சர்வசக்தி கணபதிக்கு சிறப்பு பூஜை
x

குடியாத்தத்தில் 15 அடி உயர சர்வசக்தி கணபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் பிச்சனூர் ஆதிமூலம் சுவாமி மடம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரின் சார்பில் 15 அடி உயரத்தில் சர்வசக்தி கணபதி அமைக்கப்பட்டது. கண் திறப்பு நிகழ்ச்சிக்காக நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்‌.சவுந்தர்ராசன், சிக்சா கேந்திரா பள்ளிகளின் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு, விழா குழுவின் துணைத்தலைவர் ஆர்.தட்சிணாமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story