கோவில் யானைக்கு சிறப்பு பூஜை


கோவில் யானைக்கு சிறப்பு பூஜை
x

ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தஞ்சாவூர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் மங்கலம் யானைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு மங்கலம் யானைக்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் கோவில் சிவாச்சாரியார்கள் யானை மங்கலத்துக்கு மலர்தூவி தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மங்கலம் யானையை வழிபட்டனர்.


Next Story