முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆனிமாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நாமக்கல்

ஆனி மாத கிருத்திகையை யொட்டி நேற்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story