நவராத்திரி விழாவையொட்டி சவுடேஸ்வரி அம்மன் ேகாவிலில் சிறப்பு பூஜை
நவராத்திரி விழாவையொட்டி சவுடேஸ்வரி அம்மன் ேகாவிலில் சிறப்பு பூஜை
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் சரஸ்வதி பூஜை, நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை வைத்து வழிபாடு தொடங்கியது. இதையடுத்து நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா களை கட்டியது. நெகமம் காமாட்சி அம்மன் கோவில், சவுடேஸ்வரியம்மன் கோவில், வீரமாத்தியம்மன் கோவில்களில் நவராத்திரி கொலு பொம்மை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதேபோல் பல வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மை அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.இதில் மாலை நேரத்தில் பல்வேறு பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story