வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை


வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Aug 2023 2:30 AM IST (Updated: 7 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி

வராஹி அம்மனை வழிபட பஞ்சமி திதி மிக உகந்த நாளாகும். இந்த நாளில் வராஹியை மனதார வழிபட்டால், கேட்ட வரங்கள் கிடைக்கும். பகை, எதிர்ப்பு, தடை போன்ற பிரச்சினைகள் நீங்கி விடும் என்பது ஐதீகம். இதையடுத்து தேய்பிறை பஞ்சமி திதி நாளான நேற்று கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலிலும் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story