கால பைரவருக்கு சிறப்பு பூஜை


கால பைரவருக்கு சிறப்பு பூஜை
x

கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் ஸ்ரீ வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பால், பழம், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story