சேலம் வழியாக ஹூப்ளி- தஞ்சாவூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


சேலம் வழியாக ஹூப்ளி- தஞ்சாவூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

சேலம் வழியாக ஹூப்ளி- தஞ்சாவூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:

ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07325) வருகிற 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் ஹூப்ளி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண் 07326) வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன், திருச்சி கோட்டை, கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story