தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு இன்றும் நாளையும் சிறப்பு ரெயில் இயக்கம்
பொங்கல் முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அனைத்து வகுப்பிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளதால் சிறப்பு ரெயில்கள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் புறப்பட்டு செல்கின்றன. எண்:06041 கொண்ட இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. திருநெல்வேலியில் இருந்து இன்று பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு நாளை அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் நிலையம் வந்தடைகிறது.
இதேபோல 16-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.
இந்த ரெயில் மறுமார்க்கத்தில் 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. நாளை (14-ந்தேதி) இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. 18-ந்தேதி (எண்:06050) சிறப்பு ரெயில் திருநெல்வேலியில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
பொங்கல் முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திண்டுக்கல்-கோவை இடையே இரு மார்க்கமும் சிறப்பு ரெயில் இன்று முதல் 18-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.