திருப்பூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப கூடுதலாக ஒரு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 1:45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரெயில், காசர்கோடு, பையனூர், கண்ணுர், கோழிக்கோடு, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நின்று 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.
சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தாம்பரம் சென்றடையும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story