நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்


நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
x

திருவிழாவையொட்டி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் வருகிற 17-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திருவிழாவையொட்டி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் வருகிற 17-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்

ரெயில்வே துறை சார்பில் பண்டிகை மற்றும் திருவிழாக்களையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (எண்-06012) இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரெயில் வருகிற 17-ந் தேதி முதல் 7-9-2022 வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படும்.

திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 3.25 மணிக்கு புறப்பட்டு, 4.07 மணிக்கு குழித்துறை, 6.33 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வந்து வள்ளியூர் மற்றும் நெல்லை வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் இந்த ரெயில் (எண்-06011) வியாழக்கிழமை நள்ளிரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.28 மணிக்கு நாகர்கோவில் வந்து மதியம் 1 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது.

எர்ணாகுளம் சந்திப்பு

இதுபோல் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (எண்-06039) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலானது 15-ந் தேதி முதல் 5-9-2022 வரை இயங்கும். எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து திங்கட்கிழமை தோறும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு கோட்டயம், கொல்லம், செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக மறுநாள் காலை 8.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (எண்-06040) செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பு வந்தடைகிறது. இந்த தகவலை தென்னக ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story