ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி


ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:45+05:30)

சாத்தான்குளம் அருகே சாலைபுதூரில் ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஷா பணியாளர்களுக்கு தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலை எதிர் கொண்டு கள பணியாற்றுவது, சிறப்பாக பணியாற்றுவது குறித்து தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி பயிற்சியை நடத்தினார். இதில் சாலைபுதூரை சேர்ந்த 17 ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் உள்ளிட்ட மருத்துவமனையாளர்கள் உடனிருந்தனர்.


Next Story