சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்; இன்று நடக்கிறது
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நமையூர் கிராமத்தில் உள்ள டி.இ.எல்.சி. தொடக்கப்பள்ளி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் தாது உப்புக்கலவை வினியோகம், சிறப்பு கண்காட்சி, குறைந்த செலவில் கறவைப்பசு தீவனம் வழங்குதல் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளது. எனவே முகாமில் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story