சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்


சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்
x

மேட்டுக்குடிசை கிராமத்தில் சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வரகூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகுடிசை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 480 கால்நடைகளுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம் சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம் செய்தல் உள்பட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தடுப்பூசிகள், ஊட்டச்சத்து மருந்துகள், குடற்புழு நீக்க மருந்துகள் அளிக்கப்பட்டது. மேலும், சிறந்த கிடாரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கி, உணவு மேலாண்மை குறித்து வைக்கப்பட்ட அரங்கினை கலெக்டர் பார்வையிட்டார். இந்த முகாம் போன்று மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 முகாம்கள் வீதம் 140 முகாம்கள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கால்நடை உதவி இயக்குனர் உதயகுமார், கால்நடை மருத்துவர்கள் லட்சுமணன், கோபிந்தாத், ரகு, தாசில்தார் வசந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாபாபு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story