டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு


டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு
x
தினத்தந்தி 16 Sept 2023 2:00 AM IST (Updated: 16 Sept 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.


இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீம் நிர்மலா கூறியதாவது:-


கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மருந்தகங்களில் சுயமாக மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story