அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு; தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு; தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்

செயற்குழு கூட்டம்

பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. செயற்குழுக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நாளை (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு கொடுப்பது. நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்வது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் தி.மு.க. கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், அவர்களின் குடும்பத்தினர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பிரபாகரன் எம்.எல்.ஏ., மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் வல்லபன், பரமேஸ்குமார், பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிர் அணி, பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story