குறு, சிறு தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் குறு, சிறு தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது
விழுப்புரம்
விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 1.9.2023 வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சி.பழனி கேட்டுக்கொண்டுள்ளார்.