சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி
சங்கடகர சதுர்த்தியையொட்டி தர்மபுரியில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சங்கடகர சதுர்த்தி
தர்மபுரியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடகர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.
செல்வ கணபதி கோவில்
இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் விநாயகர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோவில், செல்வ கணபதி கோவில், கடைவீதி ஏலூர் பிள்ளையார் கோவில், மற்றும் அன்னசாகரம், மதிகோன்பாளையம், பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.