பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு


பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம் நெய், தேன், திருநீறு, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளியங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story