ஆனைமலை அருகே பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆனைமலை அருகே பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை அருகே பெரிய கடை வீதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மேலும் சிறப்பு கருட ஹோமம், கணபதி ஹோமம் என சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. அப்போது ஸ்ரீ ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்துகொண்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story