பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி செஞ்சி, விக்கிரவாண்டி பகுதி பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

செஞ்சி

சிங்கவரம் ரங்கநாதர்

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் மூலவர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெருமாள், செஞ்சி கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் மற்றும் வெங்கட்ரமணர் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வரதராஜபெருமாள்

விக்கிரவாண்டியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளாகன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் முன்னின்று செய்தார். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story