சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிருத்திகையையொட்டி சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் சன்னதி தெரு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பாலசுப்பிரமணியருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் தேவபாண்டலம் குந்தவேல் முருகர், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான் கோவில், சங்கராபுரம் பூட்டை சாலை முருகர் கோவில், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் கோவில் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story