உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு


உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

பிரதோஷத்தையொட்டி உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதருக்கு தேன், பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இதைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி கரபுரநாதர் சாமி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சேலம், கொண்டலாம்பட்டி, பெரியபுத்தூர், சின்னபுத்தூர், நெய்க்காரப்பட்டி, பூலாவரி, அரியானூர், வேம்படிதாளம், வீரபாண்டி, வேடுகத்தான்பட்டி, சிவதாபுரம், தம்மநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story