விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

விருதுநகர்

சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வன்னி விநாயகர்

சாத்தூர் அருகே பெரியஓடைப்பட்டியில் ஸ்ரீ வன்னி விநாயகர் கோவிலில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுபாஷினி, அறங்காவலர்கள் வெங்கடேஸ்வரன், குருசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

அதேபோல ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள விநாயகர் கோவில், சாத்தூர் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பிள்ளையார் கோவில், வெள்ளக்கரை ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், என்.ஜி.ஓ. காலனி விநாயகர் கோவில், கே.கே. நகரில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை மாரியம்மன் கோவில் வளாகம், பொன் விநாயகர் கோவில் அருகில், சிப்பிப்பாறை நடுத்தெரு உள்பட 17 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு பூஜை

சிவகாசி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சிவகாசி சிவன் கோவிலில் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதேபோல் சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில், முருகன் கோவிலில் உள்ள விநாயகர், தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில், செங்கமலநாச்சியார்புரத் தில் உள்ள விநாயகர் கோவில், தொழிற்பேட்டையில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.


சாமி தரிசனம்

வத்திராயிருப்பில் வெள்ளை பிள்ளையார் கோவில், தாணிப்பாறை விளக்கில் உள்ள ஆலமரத்து விநாயகர் கோவில், வத்திராயிருப்பு அர்ச்சுனா நதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆற்றங்கரை பிள்ளையார் கோவில், ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ள மலை முந்தல் கோவில், விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர், என்.ஜி.ஓ. காலனி வழி விடு விநாயகர், அக்ரகாரம் தெரு அரச மரத்து விநாயகர், லட்சுமி நகர் ஊருணிக்கரை விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, ஆலங்குளம், அருப்புக்கோட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story