கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பனவடலிசத்திரம் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் பகுதிகளான மேலசிவகாமியாள்புரம் அழகப்பசாமி கோவில், மேலநீலிதநல்லூர் சிவஞான வெளியப்ப சாஸ்தா, சின்ன கோவிலங்குளம் கொடுங்காலபோத்தி அய்யனார் கோவில், மேலஇலந்தைகுளம் சீவலப்பேரி மாடசாமி கோவில், வன்னிக்கோனேந்தல் சூட்டுலிங்க அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலர் அலங்காரம், சந்தன அலங்காரம், சிறப்பு யாக பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story