ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:45 PM GMT)

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். மேலும் மாதம் தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி நேற்று மூலம் நட்சத்திரத்தை யொட்டி வெள்ளி அங்கி சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாதந்தோறும் சார்த்தபடும் வெள்ளி அங்கியை இந்த முறை புதுப்பிக்கப்பட்டு சாமிக்கு சார்த்தப்பட்டதால் மிகவும் பிரகாசமாக காணப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



Next Story