பைரவருக்கு சிறப்பு வழிபாடு


பைரவருக்கு சிறப்பு வழிபாடு
x

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்


நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைப்போல கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைப்போல நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோவிலில் அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 More update

Next Story