கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு


கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
x

தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்

தேய்பிறை அஷ்டமியையொட்டி பெரம்பலூா் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் உள்ள காலபைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதே போல் வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் உள்ள பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடந்தது. இதில் பைரவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. யாகத்தில் மஞ்சள், குங்குமம், வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மா, பலா, வாழை திராட்சை, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் இடப்பட்டன. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகிலுள்ள செங்குந்தபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story