பேராவூரணி நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்
பேராவூரணி நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி;
பேராவூரணி நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை மனு
பேராவூரணி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கு ெரயில்வே லைன் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அறநிலையத்துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள நாட்டாணிக்கோட்டை செல்லும் சாலை, செங்கொல்லை செல்லும் சாலை, ெரயில்வே லைன் கிழக்கு தெரு செல்லும் சாலை, கடைவீதி செல்லும் சாலை ஆகிய நான்கு சாலை சந்திப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடை அமைத்து தர வேண்டும்
நான்கு சாலைகளும் பிரிந்து செல்லும் இடமான மீன் மார்க்கெட் பின்புறம் உள்ள இடத்தில் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நான்கு சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் பேராவூரணி நான்கு சாலை சந்திப்பில் நான்கு புறமும் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.