மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி


மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி
x

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடந்தது.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடந்தது.

கைப்பந்து போட்டி

ராமநாதபுரத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியை கல்லூரியின் முதல்வர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்த அமர்வு கைப்பந்து போட்டியில் விஜயசாந்தி அறக்கட்டளை பொறுப்பாளர் விஜயசாந்தி, செயலாளர் வீரப்பமுயலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டியில் மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றன.

பாராட்டு

200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். தரையில் அமர்ந்தபடியே மாற்றுத் திறனாளிகள் கைப்பந்து விளையாடியதை ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து அனைத்து வீரர்களையும் கை தட்டியபடி பாராட்டி ஊக்குவித்தனர்.

அதுபோல் இந்த மாநில அளவிலான மாற்றுத்திறனாளி களுக்கான அமர்வு கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் அணிக்கு பரிசு தொகையாக ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-வது அணிக்கு ரூ. 10 ஆயிரமும், 3-வது அணிக்கு ரூ. 8 ஆயிரமும், 4-வது அணிக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


Next Story