போலீசார்-பொதுமக்களிடையே விளையாட்டு போட்டி
போலீசார்-பொதுமக்களிடையே விளையாட்டு போட்டி நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் விளையாட்டு போட்டிகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவுறுத்தினார். அதன்படி லெப்பைக்குடிகாடு கிராமத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடி, கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. போலீசார் சார்பில் ஒரு அணியும், பொதுமக்கள் சார்பில் ஒரு அணியும் என 2 அணிகள் பங்கேற்றன. இதில் கைப்பந்து போட்டியில் பொதுமக்கள் அணியும், கபடி போட்டியில் போலீசார் அணியும் வெற்றி பெற்றன. அந்த அணிகளுக்கும், சிறப்பாக விளையாடியவர்களுக்கும் பரிசுகளை ஷ்யாம்ளா தேவி வழங்கினார். இதில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன், இன்ஸ்பெக்டர் நடராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீசார், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story