பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான குறுவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான கபடி போட்டியும், பெண்களுக்கான கால்பந்து போட்டியும் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு களரம்பட்டி, அரசு ஆதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், குறுவட்ட ஒருங்கிணைப்பு குழு செயலாளருமான ஆறுமுகம் மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குனரும், குறுவட்ட போட்டிக்கான இணை செயலாளருமான பாஸ்கர் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.


Next Story