மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்


மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
x

மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

அரியலூர்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான பூப்பந்து, மேசைப்பந்து, வளையப்பந்து ஆகிய போட்டிகள் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. குறு வட்ட செயலாளர் கிருஷ்ணசாமி மாணவ, மாணவிகளை வரவேற்று வாழ்த்தி பேசினார். 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இப்போட்டிகளை மேலணிக்குழி பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராமதாஸ் வாழ்த்தி பேசினார். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை குறுவட்ட இணைச் செயலாளரான உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ் செய்திருந்தார். போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story