மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

தஞ்சாவூர்

தஞ்சையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் கோப்பை

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 50 மீட்டர் ஓட்டப்பந்தயம். 100 மீ ஒட்டப்பந்தயம், இறகுப்பந்து, சிறப்பு கையுந்துபந்து, எறிபந்து, கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 50 ஆண்கள். 86 பெண்கள் உட்பட மொத்தம் 136 பேர் கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் பரிசு

இதில் மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மேலும் மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் பெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ1,00,000/-மும். 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும் மற்றும் 3-ம்பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், தஞ்சை மாவட்ட விளையாட்டுப் பிரிவு பயிற்றுனர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story