முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
திருவாரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
திருவாரூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர் கோப்பை
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியை மாவட்டகலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டுப்பிரிவு சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 25-ந்தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சதுரங்க போட்டிகள் நடக்கிறது.
அடையாள அட்டை
போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வரவேண்டும்.போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்த நகல், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உறுதி சான்றிதழ். மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டை நகல், அரசு ஊழியர்களின் (நிரந்தரப் பணியாளர்) அடையாள அட்டை நகல் மற்றும் பொதுமக்கள் ஆதார் நகல் ஆகியவற்றுடன் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, விளையாட்டு அலுவலா் ராஜா, நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயசந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.