முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
விருதுநகரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விருதுநகரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு ேபாட்டி
விருதுநகர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியினையும், சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியினையும் கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
மேலும் விளையாட்டின் முக்கியத்துவம், விளையாட்டினால் என்ன பலன் ஏற்படுவது என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து விளையாட்டின் மூலம் நல் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள முடியும். இதில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை.
மாநில அளவில் தேர்வு
இதில் பங்கேற்பது முதல் வெற்றி. இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துகள் என கலெக்டர் கூறினார். பல்வேறு விளையாட்டு போட்டிகள் வருகிற 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.3ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பை பெறுவர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட விளையாட்டுஅலுவலர் குமார் மணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.