விளையாட்டு விழா


விளையாட்டு விழா
x

ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24-வது விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் மாணவர்கள் இறைவணக்கம் பாடினர். முதல்வர் உமா பைபிள் வாசித்தார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாணவ-மாணவிகள் பாடினர். பள்ளியின் தாளாளரும், திருமண்டல பெருமன்ற உறுப்பினருமான தேவா காபிரியேல் ஜெபராஜன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நெல்லை மாநகர தலைமையிடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர், அரசு மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண்ட்ரூஸ் புரொமோட்டர்ஸ் ஆண்ட்ரூஸ், தொழிலதிபர் ஜே.ஜே.சாமுவேல், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர், ஜெரீன், ரோஜர், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story