விளையாட்டு விழா


விளையாட்டு விழா
x

சேரன்மாதேவி ஸ்காட் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஸ்காட் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஸ்காட் சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு ஸ்காட் நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு முன்னிலை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் ஐஸ்டின் திரவியம் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் அன்வர் ராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பரிசுகள் வழங்கினார். ஆசிய வலுதூக்கும் வீரர் உதயகுமார் வாழ்த்துரை வழங்கினார். இந்த கல்வி ஆண்டில் தடகள போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில், உடற்கல்வி இயக்குனர் அலிஸ் பொன்ராணி நன்றி கூறினார். விழாவில் ஸ்காட் நிறுவன பொதுமேலாளர்கள் தம்பிதுரை, கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர்கள் மணிமாறன், பியூலா, காசி விஸ்வநாதன், நாகராஜன், நிர்வாக அலுவலர்கள் ஜெயபாண்டி, சித்திரை சங்கர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story