அரசு பள்ளியில் விளையாட்டு விழா
எஸ்.பி. பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் விளையாட்டு விழா நடந்தத
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் தலைமை தாங்கினார். பள்ளி (பொறுப்பு) தலைமை ஆசிரியர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டிகளை திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் தொடங்கி வைத்தார்.
இதில் கபடி, கைப்பந்து, கோ-கோ, தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளை அணி அதிக புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும், தலா 3 மாணவ, மாணவியர் தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷாஜகான், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்திமர்ஜான், பட்டதாரி ஆசிரியர் ராஜினி, உடற்கல்வி ஆசிரியர்கள் செங்கோல் ராணி, தைனஸ் மேரி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவ-மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் துரைராஜ் நன்றி கூறினார்.
ு.