நாய் கடித்து புள்ளிமான் சாவு


நாய் கடித்து புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாய் கடித்து புள்ளிமான் இறந்தது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள கீழவண்ணாரிருப்பு பகுதியில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து பிரான்மலை பகுதி வனக்காப்பாளர் ஞானசேகரன் தலைமையில் வனக்குழுவினர் அங்கு சென்று விசாரித்தனர். அந்த புள்ளிமான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது தெருநாய் கடித்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மானை உடற்கூறு ஆய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

1 More update

Next Story