நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு


நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் சாவு
x

வந்தவாசி அருகே நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே இளங்காடு கிராமத்தில் செந்தில்ரங்கன் என்பவரின் விவசாய நிலத்தில் காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி புள்ளி மான் வந்தது.

அப்போது அங்குள்ள கம்பி வேலியில் புள்ளிமான் சிக்கி கொண்டது. அதனை பார்த்த அங்கிருந்த நாய்கள் புள்ளிமானை கடித்து குதறியது.

உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவாய் ஆய்வாளர் இப்ராஹிம். கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் வந்து புள்ளிமானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் ஆரணி வனச்சரவை காப்பாளர் பாலச்சந்தர் வனவர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து உயிருக்கு போராடிய புள்ளிமானை மீட்டு வந்தவாசி தனியார் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்த கால்நடை டாக்டர், நாய் கடித்ததில் புள்ளிமான் இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story