கண்மாய் கரையில் இறந்து கிடந்த புள்ளிமான்


கண்மாய் கரையில் இறந்து கிடந்த புள்ளிமான்
x

கண்மாய் கரையில் புள்ளிமான் இறந்து கிடந்தது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே அரசமலை சம்புருதி கண்மாய் கரையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற அரசமலை வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோர் கிராம உதவியாளர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனக்காப்பாளர் கனகவள்ளியிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.


Next Story