இலங்கை தம்பதி உண்ணாவிரதம்


இலங்கை தம்பதி உண்ணாவிரதம்
x

இலங்கை தம்பதி உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் தங்க வைக்கப்படுவது வழக்கம். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களுக்கு சொந்த நாட்டுக்கு செல்வது வரை இந்த சிறப்பு முகாமில் தான் தங்கியிருக்க வேண்டும். அதன்படி வெளிநாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த முரளிதரன் (வயது 28), லாவசந்தன் (34) ஆகியோர் தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 11-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் பாஸ்போர்ட் வழக்கில் கைதான இலங்கையை சேர்ந்த பர்வேஜ்ஹவ்லேடர்-சாடியா பேகம் தம்பதி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 10 வயது பெண் குழந்தை தர்மபுரியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை தங்களுடன் சிறப்பு முகாமில் தங்க வைக்கக்கோரி இந்த தம்பதி நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இதுபற்றி அறிந்த கே.கே.நகர் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கSri Lankan couple fastingள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.


Next Story