தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!


தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!
x

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம்,

இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர் மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர். நீண்ட நாட்களாக இதே வேலையில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படைக்கு தொடர்ந்து பலர் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. ஒரு படகு உட்பட 14 மீனவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story