போலி முகவரி காட்டி பாஸ்போர்ட் பெற்ற இலங்கை தமிழர் கைது


போலி முகவரி காட்டி பாஸ்போர்ட் பெற்ற இலங்கை தமிழர் கைது
x

போலி முகவரி காட்டி பாஸ்போர்ட் பெற்ற இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் தயானந்தன் (வயது 36). இவர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரில் குடியிருப்பதாக கூறி, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்று உள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இலங்கை தமிழர் என்பதை மறைத்து, போலியான முகவரியை காட்டி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து தாந்தோணிமலை போலீசார் தயானந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.


Next Story